Öffnungszeiten

Sprachauswahl/மொழி

தமிழ்  Deutsch  Englisch

 

tl_files/Tamilisch 2017/Viseda thinam 2017.jpg
tl_files/fM_k0002/New 2015/Bank.jpg  
   


Addresse:
Siegenbeckstraße 4-5
59071 Hamm
Deutschland

Tel.: 023 88/30 22 23

Fax: 023 88/30 22 24


 email:

info@kamadchi-ampal.de


Öffnungszeiten:

Täglich von 8.00 – 14.00 Uhr und 17.00 – 20.00 Uhr

 

திறக்கும்நேரம்:

தினமும் 8:00 - 14:00 மணி, மாலை 17:00 - 20:00 மணி


Gottesdienste:
Täglich um 8.00 Uhr, 12.00 Uhr und 18.00 Uhr

 

பூசைநேரங்கள்:

தினமும் காலை 8.00 மணி, நன்பகல் 12.00 மணி, மாலை18.00மணி

 

கிரீஸ்கைம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஜெர்மனி


Sri Venugopala Suwami Temple India


Anfahrt    போக்குவரத்து


Impressum

Datenschutz und -sicherheit


தற்போதைய தகவல்

விழாக்காலங்களில் வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்கருதி ஆலயத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசேட திருப்பணி

அம்பிகை அடியார்களே!

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய திருப்பணிகளும் ஆலயம் மக்களுக்காக செய்துவரும் சேவைகளும் அம்பிகை அடியார்கள் அனைவரும் அறிந்ததே இந்த புனித சேவையை செய்வதற்காக ஆலயம் சில நேரங்களில் பல நெருக்கடிகளை சந்திப்பதும் உண்டு அதன் காரணமாக புதிய திருப்பணிகளை செய்யவேண்டிய தேவைகளும் ஏட்படுவதுண்டு அதனடிப்படையில் ஆலயத்தின் கலாசார மையம் அமையவிருக்கும் இடத்தில் திருவழக்காலங்களில் கூடும் பல ஆயிரம் மக்களின் நலன்கருதி அவசர கால வெளியேற்ற வழிகள் அந்த இடத்தின் நான்கு பக்க்கத்திலும் இருக்க வேண்டும் என சட்ட்டமூலமான நெருக்கடி ஆலயத்துக்கு ஏட்பட்டுள்ளது அதை சமாளிக்கும் முகமாக அந்த இடத்தின் அருகில் உள்ள காணியை ஆலயத்தை வாங்குமாறு நகரசபை வலியுறுத்தியுள்ளது.

 

எனவே இந்த முக்கிய திருப்பணியில் அம்பிகை அடியார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மிக அன்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்த புதிய திருப்பணி பற்றிய விளக்கப்படத்தை கீழே காண்க.

 

படத்தை பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்...

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

தசரதன் சனிபகவானைப் பார்த்து, "ஆதவன் மைந்தனே! ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தாங்கள் பின்னம் செய்வதால் பனிரெண்டு காலம் நீடிக்கக் கூடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சகாலம் ஏற்படக்கூடாது. அதையே நான் தங்களிடம் முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்." என்று மீண்டும் கூறினான்.

 

சனிபகவான், "அதைத்தான் நான் முன்பே கொடுத்து விட்டேன். என்னிடமிருந்து இந்த வரம் பெற்றமையால் உலகம் உள்ள வரை உனது கீர்த்தி நிலைத்திருக்கும். மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான்.

 

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை பிரார்த்தித்து பின் சனி பகவானை நோக்கி ஸ்தோத்திரம் பண்ணத் தொடங்கினான்.

 


நம: கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச

நம: காலாக்னிரூபாய க்ருந்தாய ச வை நம:

நமோ நிர்மாம்ஸ தேகாய தீர்கச்மரு ஜடாய ச


நம: புஸ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம:

நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம:


நமோ கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸ்துதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாயச


அதோ த்ருஷ்டே! நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமஸ்துதே

நமோ மந்தகதே துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தக்த தேஹாய நித்யப் யோக ரதாய


நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம:

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே

துஷ்டோ தகாசிவை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்.

காலத்தின் தேவை கருதி மிக விரைவாக அமையவிருக்கும் கலாச்சார மையம் பற்றிய விசேட அறிவித்தல்...

அம்பிகை அடியார்களே!

 

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் மக்களின் நலன்கருதி எமது காலாசார பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு காட்டுமான பணிதான் இக் கலாச்சார மையம் ஆகும்.. ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக இப்பணியை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்து. இந்த நிலையை சமாளிக்கும் முகமாக  நாம்  இன்னொரு திட்டத்தை உங்கள் முன் வைக்கின்றோம். அதாவது இந்த சிறந்த பணிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் இந்த வழிமுறைகளை கையாண்டு எமது கலை கலாச்சாரத்தை இந்த நாட்டில் நிலைநிறுத்த உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.. 

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துதவும்...........

ஆலயம்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.

 

தினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 5.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

கிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார்  (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

அன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.

 

அன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது!

 

ஆலயகுரு

அனைவருக்கும் வணக்கம்!


அம்பாளின் அருளும் குருவின் ஆஸியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எமது பரிபூரண ஆஸிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.


ஆலய ஆதீனகர்த்தா

"ப்ரதிஸ்டா கலாநிதி" "ஸ்ரீவித்யா உபாசகர்""பக்குவத்திருமணி "

சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்